கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது


கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:46 PM GMT)

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

கன்னியாகுமரி

சுசீந்திரம் அருேக உள்ள வழுக்கம்பாறை சகாயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன்(வயது60), தொழிலாளி. இவர் தனது வீட்டின் பின்பகுதியில் கூண்டு வைத்து கோழிகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று கோழிகளின் சத்தம் அதிகமாக வந்ததை அடுத்து அங்கு சென்று பார்த்தார். அப்போது, கூண்டுக்குள் ஒரு மலைப்பாம்பு கோழியை விழுங்கி விட்டு வெளியே வரமுடியாமல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் வீரர்கள் அங்கு விரைந்து சென்று கோழிக்கூண்டுக்குள் இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த காட்டுப்பகுதியில் விடப்பட்டது.


Next Story