செந்துறை அருகே தோட்டத்துக்குள் புகுந்து கோழிக்குஞ்சுகளை விழுங்கிய மலைப்பாம்பு


செந்துறை அருகே தோட்டத்துக்குள் புகுந்து கோழிக்குஞ்சுகளை விழுங்கிய மலைப்பாம்பு
x

செந்துறை அருகே தோட்டத்துக்குள் புகுந்து கோழிக்குஞ்சுகளை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.

திண்டுக்கல்

செந்துறை அருகே உள்ள ஒடுகம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவருக்கு சொந்தமான தோட்டம் அதே கிராமத்தில் உள்ளது. இந்தநிலையில் இன்று காலை ராஜா வழக்கம்போல் தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது தோட்டத்தில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது.

மேலும் அது கோழிக்குஞ்சு ஒன்றை விழுங்கி கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா, உடனடியாக நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் திருக்கோல்நாதர் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், தோட்டத்தில் கிடந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் மலைப்பாம்பை கரந்தமலை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். இதுகுறித்து ராஜா கூறுகையில், தோட்டத்தில் கோழி, சேவல்களை வளர்த்து வருகிறேன. தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு 7 கோழிக்குஞ்சுகளை விழுங்கியது என்றார்.


Next Story