விதையின் தரத்தை பரிசோதனை செய்து விதைக்க வேண்டும்; வேளாண்மை அலுவலர் தகவல்


விதையின் தரத்தை பரிசோதனை செய்து விதைக்க வேண்டும்; வேளாண்மை அலுவலர் தகவல்
x

விதையின் தரத்தை பரிசோதனை செய்து விதைக்க வேண்டும் என்று வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு

விதையின் தரத்தை பரிசோதனை செய்து விதைக்க வேண்டும் என்று வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.

விதை நேர்த்தி

பூஞ்சாண கொல்லி, பூச்சி கொல்லியை தனித்தோ அல்லது ஒருங்கிணைத்தோ விதைகளின் மேல் இடுவதே விதை நேர்த்தியாகும்.

இதனால் மண் மூலம் பரவும் நோய் மற்றும் சேமிப்பில் விதைகளை தாக்கும் பூச்சிகளில் இருந்து காக்கலாம். பயிரில் நோய்கள் பரவாமல் தடுக்கும்.

விதை அழுகல், நாற்று அழுகல் தடுக்கப்படும். முளைப்பு திறன் அதிகரிக்கும். உலர் விதை நேர்த்தி மற்றும் ஈர விதை நேர்த்தி என 2 முறைகளில் விதை நேர்த்தி செய்யலாம்.

நெல் விதைகளுக்கு 2 நேர்த்தி முறையும் செய்யலாம். காய்கறி விதைக்கு உலர் விதை நேர்த்தி முறையாக பயன்படுத்தலாம்.

நெல் விதைகளை 1 சதவீதம் கே.சி.எல். கரைசலில் 12 மணி நேரம் ஊற வைப்பதால், முளைப்பு திறன், வீரியத்தை அதிகரிக்கும். மக்காச்சோளம் விதைகளை என்.ஏ.சி.எல். 1 சதவீதம், அல்லது கே.எச்2, பி.ஓ.4, 1 சதவீதம் கலவையில் 12 மணி நேரம் ஊர வைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்துக்கு ஏற்ற நெல் ரகங்களான ஏ.டீ.டி.36, 37, 43, ஏ.டீ.டி. (ஆர்) 45, 43, கோ51, டி.பி.எஸ்.5, ஏ.எஸ்.டீ16 ஆகியவற்றை பயிரிடலாம்.

முளைப்பு திறன்

விதைகள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதால், விதை பரிசோதனை செய்து பின்னர் விதைப்பது நல்லது.

அதன்படி, தக்காளி, காலிபிளவர், கத்தரி, வெங்காயம், முட்டைகோஸ், நூல்கோல், முள்ளங்கி, மிளகாய் விதை மாதிரிகளுக்கு 10 கிராம், கேரட், பீட்ரூட், கொத்தவரை, கீரை வகைகளுக்கு 50 கிராம், பூசணி, சுரைக்காய், வெண்டை, தர்பூசணிக்கு 100 கிராம், பீர்க்கன், பாகற்காய், புடலை மற்றும் கொடி காய்களுக்கு 150 கிராம் விதை மாதிரிகளை வழங்கி முளைப்பு திறன் அறியலாம்.

மேலும் விவரங்களுக்கு ஈரோடு திண்டல் வித்யா நகரில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தை அணுகலாம் என்று விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.


Next Story