போலி பத்திரம் தயாரித்து வீட்டை அபகரித்த ரவுடிகள்


போலி பத்திரம் தயாரித்து வீட்டை அபகரித்த ரவுடிகள்
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போலி பத்திரம் தயாரித்து வீட்டை அபகரித்த ரவுடிகள் மீது கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதியினர் புகார் தெரிவித்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

வானூர் தாலுகா பெரியமுதலியார்சாவடி பகுதியை சேர்ந்த ஜெயபால் (வயது 70), அவரது மனைவி மீனாட்சி (63) ஆகிய இருவரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் வசித்து வரும் வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள எங்கள் பராமரிப்பில் உள்ள காலிமனைக்கு சொத்து வரி, மின் இணைப்பு வரி ஆகியவற்றை அரசுக்கு முறையாக செலுத்தி வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடிகள் எங்கள் வீட்டுக்கு வந்து, இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது எனவே வீட்டை காலி செய்துவிட்டு செல்லும்படி மிரட்டல் விடுத்ததோடு எங்கள் இருவரையும் கீழே தள்ளி வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் 4 பவுன் நகை, ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டனர்.

ரவுடிகள் மீது நடவடிக்கை

மேலும் எங்களை அந்த இடத்தில் இருந்து விரட்டி விட்டனர். தற்போது எங்களுக்கு வசிக்க இடமில்லாமல் குழந்தைகளுடன் சாலையோரம் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு சொந்தமான வீடு, இடத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்த ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் குடும்பத்தினருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story