வெண்ணாற்றில் மண்டி கிடக்கும் நாணல்களை அகற்ற வேண்டும்


வெண்ணாற்றில் மண்டி கிடக்கும் நாணல்களை அகற்ற வேண்டும்
x

வெண்ணாற்றில் மண்டி கிடக்கும் நாணல்களை அகற்ற வேண்டும்

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்திலிருந்து கொரடாச்சேரி வரை வெண்ணாற்றில் நாணல்கள் மற்றும் செடிகள் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் வையகளத்தூர், ஒளிமதி, பழையநீடாமங்கலம், அனுமந்தபுரம், பழங்களத்தூர், ஒட்டக்குடி, களத்தூர் மேல்கரை போன்ற கிராமங்களில் விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் சுற்றுவட்டார கிராமங்களில் கரை உடைந்து இந்த கிராமத்தில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது. மேலும் மண்டி கிடக்கும் நாணல்கள், செடிகளால் வெண்ணாற்றில் தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெண்ணாற்றில் மண்டி கிடக்கும் நாணல்கள் மற்றும் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story