வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்தது


வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்தது
x

ஆதனக்கோட்ைட அருகே வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை

குளிர்சாதன பெட்டி வெடித்தது

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே பெருங்களூர் ஊராட்சி மணவாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பானுமதி-மாரிமுத்து. இவர்களது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து தீப்பிடித்தது. மேலும் வீட்டில் உள்ள அறைகளிலும் தீப்பிடித்தது.

பொருட்கள் நாசம்

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) குமரேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள், ரூ.50 ஆயிரம், முக்கிய ஆவணங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின.


Next Story