சேறும், சகதியுமாக மாறிய சாலை


சேறும், சகதியுமாக மாறிய சாலை
x

மூலைக்கடை-பாதிரிமூலா இடையே சேறும், சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

நீலகிரி

.பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா காலனியில் ஏராளமான ஆதிவாசி மக்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அய்யன்கொல்லி மூலைக்கடையில் இருந்து பள்ளத்தாக்கான பகுதியில் உள்ள பாதிரிமூலா காலனிக்கு நடந்து செல்ல வேண்டும். இந்த சாலை மண் சாலையாக உள்ளதால், சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பாதிரிமூலா காலனி மக்கள் அத்தியாவசி பொருட்கள் வாங்கவும், ஆஸ்பத்திரிக்கு செல்லவும் அய்யன்கொல்லிக்கு வந்து செல்ல வேண்டும். சாலை குண்டும், குழியுமாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை தலையில் சுமந்தபடி கொண்டு செல்கின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வனப்பகுதியையொட்டி இருப்பதால், காட்டு யானை நடமாட்டம் இருக்கிறது. மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் மண் சாலையில் சென்று வருகின்றனர். சேறாக உள்ளதால் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story