சேறும், சகதியுமாக மாறிய சாலை


சேறும், சகதியுமாக மாறிய சாலை
x

புல்லாவெளி-சோலைக்காடு இடையே உள்ள சாலை சேறும், சகதியுமாக மாறி விட்டது.

திண்டுக்கல்

பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளியில் இருந்து சோலைக்காடு வரையிலான மலைப்பாதைக்கு தார்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இதைக்கருத்தில் கொண்டு புல்லாவெளி-சோலைக்காடு இடையே தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் புல்லாவெளியில் இருந்து ½ கி.மீ. தூரத்துக்கு தார் சாலை இன்னும் அமைக்கப்பட வில்லை. அங்கு மண் கொட்டி நிரப்பப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக மண் சாலை சேறும், சகதியுமாக மாறி விட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் செல்வோர், வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். தற்போது சோலைக்காடு, புலையன் வளைவு, நேர்மலை, கூட்டுக்காடு போன்ற இடங்களில் மிளகு சீசன் தொடங்கியுள்ளது. சேறும், சகதியுமாக இருப்பதால் கூலித்தொழிலாளிகள் வேலைக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் சில இடங்களில் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இந்த சாலையோரத்தில் 200 அடி அபாய பள்ளத்தாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த சாலையில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story