வீட்டில் இருந்து பீரோவை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
வீட்டில் இருந்து பீரோவை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது பெருஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு, அவரது மனைவி கமலா (வயது50). இவர் தேனியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.பக்கத்து வீட்டுக்காரர்கள் காலை எழுந்து பார்த்த போது வீட்டின் உள்ளே லைட் எரிந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் கமலாவுக்கு தகவல் கொடுத்தனர். இதைதொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள மற்றொரு மகளை சென்று பார்க்க கமலா கூறினார். மகள் உள்ளே வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்து ஸ்டீல் பீரோவை தூக்கிக்கொண்டு கண்மாய் பகுதியில் வைத்து உடைத்து அதில் இருந்து ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். துணிகளுக்குள் இருந்த வெள்ளி குத்துவிளக்கு தப்பியது. அதேபோல் வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து இருந்த தங்க நகைகள் அப்படியே இருந்தன. இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் கமலா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.