இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது


இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

திருவாரூர்


இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

தமிழர்களின் பங்கு

திருவாரூர் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 'ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்களின் பங்கு' என்ற நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகமே போற்றும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது. நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தவரும், முன்னாள் குடியரசு தலைவருமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரசு பள்ளியில் படித்து முன்னேறியவர். சாதித்தவர்களை நம் முன்மாதிரியாக வைத்து கொண்டு நாம் வாழ்வில் மிக உயரிய இடத்தினை அடைய வேண்டும்.

முன் மாதிரியாக...

நாமும், நமது பெற்றோர்களை கவுரவிக்கும் வகையில் சாதனைகளை படைத்து அடுத்த தலைமுறையினருக்கு முன் மாதிரியாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் (இடைநிலைக்கல்வி), மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் மணிமேகன், திருவாரூர் திரு.வி.க.கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் முல்லைநாதன், தாசில்தார் நக்கீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story