ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x

ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் தர்மர் கோவில் பகுதியை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 33). இவர் கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அண்ணா நகர் பகுதியில் வேலை பார்த்தபோது மகிமைதாஸ் மகள் பிரீத்தி (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் இவர்கள் கீரமங்கலம் சிவன் கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தேவகி இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், பிரீத்தி தனது கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் காதல் ஜோடியை அவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story