ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x

ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே உள்ள நல்லண்டார்கொல்லையை சேர்ந்தவர் வீரமணி (வயது 27). இவரும், கந்தர்வகோட்டை தாலுகா கல்லாக்கோட்டையை சேர்ந்த பழனிவேல் மகளும், கல்லூரி மாணவியுமான சினேகாவும் (19) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் இவர்கள் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல்ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இருதரப்பு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் காதல்ஜோடியை வீரமணியின் பெற்றோர் அழைத்து சென்றனர்.


Next Story