தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x

தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 25). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சு டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரும், அதே ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரியும் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி பகுதியை சேர்ந்த ஐஸ்வா (23) என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் இவர்களுடைய காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டுதஞ்சம் அடைந்தனர். அங்கே 2 பேரும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story