காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
புதுக்கோட்டை
துவார் அருகே கீழே வாண்டான்விடுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி மகள் கவிதா. இவரை காணவில்லை என்று மழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கவிதா கீழ வாண்டான்விடுதியை சேர்ந்த தங்கராசு மகன் செல்லகண்ணு (வயது 25) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து 2 பேரும் திருப்பூரில் உள்ள அய்யப்பன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். பின்னர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் உடன்படவில்லை. இதையடுத்து திருமணம் செய்து கொண்ட இருவரும் திருமண வயதை கடந்து விட்டதால் அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story