போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே மேலமடாவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 21). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவரும் ஆவுடையார்கோவில் அருகே உள்ள மேல 2-ம் வீதியை சேர்ந்த ருத்ரமூர்த்தி (22) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் ஆர்த்தியின் பெற்றோருக்கு தெரிந்ததால் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஆர்த்தி-ருத்ரமூர்த்தி இருவரும் புதுக்கோட்டை அடுத்த குமாரமலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு நேற்று புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவை சந்தித்து பாதுகாப்பு கேட்டு மனு அளித்து தஞ்சம் அடைந்தனர். மேலும் மனுவை பெற்றுக்கொண்ட அவர் பாதுகாப்பு அளிப்பதாக கூறி புகார் மனுவை ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு அனுப்புவதாகவும் கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.


Next Story