ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
புதுக்கோட்டை
ஆலங்குடி:
சிவகங்கை மாவட்டம், பெரிய வண்டாலை மேலயூரை சேர்ந்த தர்மராஜ் மகள் கவித்ரா (வயது 19). இவரும், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தெற்கு பாத்தம்பட்டியை சேர்ந்த ஆனந்தன் மகன் மணிகண்டன் (27). உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 1-ந்தேதி இருவரும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் முனீஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து ஆலங்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இரு குடும்பத்தினரையும் ேபாலீஸ் நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் காதல் ஜோடியை போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story