கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது
கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது
திருப்பனந்தாள் அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது
திருப்பனந்தாள் அருகே அணைக்கரை விநாயகன் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது40). கூலித்தொழிலாளி. இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவர் கஞ்சங்கொல்லையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று அண்ணாதுரை கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட கிராமமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்
இந்த விபத்தில் வீட்டில் இருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்கள் மற்றும் தளவாட பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது. இதன் சேதமதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூரை வீட்டிற்கு யாராவது தீவைத்தார்களா? அல்லது தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.