கெடார் அருகேகூரை வீடு எரிந்து சேதம்


கெடார் அருகேகூரை வீடு எரிந்து சேதம்
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கெடார் அருகே கூரை வீடு எரிந்து சேதமடைந்தது.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

கெடார் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்கவுண்டர் மனைவி பூங்காவனம் (வயது 65). இவர் தனியாக கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது, 1 மணியளவில் திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பூங்காவனம் வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டார்.

இதுபற்றி அறிந்த அன்னியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் பெரும்பகுதி மற்றும் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story