கூரை வீடு எரிந்து நாசம்
பொறையாறு அருகே கூரை வீடு எரிந்து நாசமானது.
மயிலாடுதுறை
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே நெடுவாசல் ஊராட்சி பட்டாவரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகார்ஜுன் (வயது35). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 12 ஆண்டுகளாக பட்டாவரம் கிராமத்தில் தங்கி தார்ப்பாய் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருந்தபோதும் வீட்டிலிருந்த மின்சாதன பொருட்கள், பீரோ, கட்டில் மற்றும் சுமார் ரூ.20 ஆயிரம் ஆகியன தீயில் கருகி நாசமானது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
Related Tags :
Next Story