கூரை வீடு எரிந்து நாசம்
மாத்தூரில் கூரை வீடு எரிந்து நாசம் அடைந்தது.
திருக்கடையூர்:
மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அக்ரஹார தெருவை சேர்ந்தவர் ஆண்டவன். இவர் கூரை வீட்டில் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, ரூ.20 ஆயிரம் மற்றும் டி.வி., மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனபெட்டி உள்ளிட்ட பொருட்களும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பத்திர ஆவணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்த தகவல் அறிந்த நிவேதா முருகன் எம். எல். ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக்,, ஊராட்சி மன்ற தலைவர் ராஜலிங்கம் உள்பட பலர் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி பணம், அரிசி, வேட்டி, சேலை, பாய். மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்டவைகளை வழங்கினர். இதேபோல் தரங்கம்பாடி தாசில்தார் புனிதா அரசின் நிவாரண உதவிகளை வழங்கினார்.