கூரை வீடு எரிந்து நாசம்
தலைஞாயிறு அருகே கூரை வீடு எரிந்து நாசம் அடைந்தது.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சி மகாராஜபுரம் மேல் பாதி கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தன் மகன் சிறைமீட்டான்.இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் மற்றும் வருவாய் ஆய்வாளர் விஜயசாரதி, கிராம நிர்வாக அலுவலர் சுகந்தி ஆகியோர் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
Related Tags :
Next Story