கட்டிட மேற்கூரை சரிந்து 3 தொழிலாளர்கள் காயம்


கட்டிட மேற்கூரை சரிந்து 3 தொழிலாளர்கள் காயம்
x

கட்டிட மேற்கூரை சரிந்து 3 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

கரூர்

கரூர் வெங்கமேடு அருகே உள்ள நாவல்நகரில் தனியார் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் மேற்கூரைக்கு (சீலிங்) கம்பி கட்டப்பட்டு சிமெண்டு கலவை போடும் பணி நேற்று நடைபெற்று வந்தது. அப்போது பாரம் தாங்காமல் திடீரென கட்டப்பட்டு வந்த சீலிங் சரிந்தது. அப்போது பணியில் இருந்த 3 தொழிலாளர்கள் சரிந்து விழுந்தனர். இதில் தொழிலாளர்கள் 3 பேருக்கு சிறுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.


Next Story