சூறைக்காற்றால் கட்டிட மேற்கூரை பறந்தது


சூறைக்காற்றால் கட்டிட மேற்கூரை பறந்தது
x

சூறைக்காற்றால் கட்டிட மேற்கூரை பறந்தது.

திருச்சி

துறையூர்:

துறையூர் அருகே கோட்டத்தூர் கிராமத்தில் உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 47). இவர், பட்டு வளர்ச்சி துறையின் கீழ் மானியம் பெற்று பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் அருகே கட்டிடம் கட்டியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது சூறைக்காற்றின் காரணமாக பட்டுப்பூச்சி வளர்ப்பு கட்டிடத்தின் மேற்கூரை பறந்து அருகே விழுந்தது. மேலும் அந்த கட்டிடம் சேதம் அடைந்தது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அசோக்குமார் மீண்டும் பட்டுப்பூச்சி வளர்ப்பு மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோன்று அதே கிராமத்தை சேர்ந்த அபுசாலி (60) என்பவர் தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம் பயிரிட்டு இருந்தார். காற்று மற்றும் மழையின் காரணமாக சோளப்பயிர்கள் சாய்ந்தன.


Next Story