தீயில் எரிந்து கூரை வீடு நாசம்
குத்தாலம் அருகே தீயில் எரிந்து கூரை வீடு நாசம் : அமைச்சர் மெய்யநாதன் நிவாரணம் வழங்கினார்
குத்தாலம்:
குத்தாலம் அருகே திருவாலங்காடு ஊராட்சி மாம்புள்ளி கீழத் தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் செல்வம். விவசாயி. இவருக்கு சொந்தமான கூரை வீடு சில தினங்களுக்கு முன்பு மின்கசிவினால் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து வீடு முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் அவரது வீட்டில் இருந்த பீரோ, கட்டில், மின் சாதன பொருட்கள், ரொக்க பணம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. இந்த நிலையில் இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் மெய்யநாதன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி விரைவில் புதிய வீடு கட்டுவதற்காக அனைத்து வசதிகளும் செய்துதர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது எம்.எல்.ஏக்கள் நிவேதா முருகன், ராஜகுமார், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் கதம்பவள்ளி சின்னையன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜவள்ளி பாலமுருகன், நாகலட்சுமி முத்துராமன், திருவாவடுதுறை ஊராட்சி தலைவர் அர்சிதா பானு சாதிக் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.