தீயில் எரிந்து கூரை வீடு நாசம்
தீயில் எரிந்து கூரை வீடு நாசம்
சிக்கல்:
நாகை ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சி புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் பிரேமதாஸ். இவர் விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்று இருந்தனர்.
அப்போது பிரேமதாஸ் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
மேலும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், டி.வி, பீரோவில் இருந்த பணம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வீட்டு மனை பட்டா, பள்ளி சான்றிதழ்கள் உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், நாகை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அனுசியா, ஊராட்சி தலைவர் தீபாமாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பிரேமதாஸ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தங்கள் சொந்த பணத்தில் இருந்து நிதி உதவிகளை வழங்கினர். இது தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.