கூரைவீடு எரிந்து சாம்பல்
உளுந்தூர்பேட்டை அருகே கூரைவீடு எரிந்து சாம்பல் ரூ 5 லட்சம் பொருட்கள் சேதம
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் கிராமத்தை சேர்ந்த கலியன் மனைவி நேற்று காலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கூரையில் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த கிராம மக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்லமுடியாமல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானதோடு, வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், ரேஷன் மற்றும் ஆதார் கார்டு, துணிகள் எரிந்து சாம்பலானது.
Related Tags :
Next Story