கூரைவீடு தீயில் எரிந்து நாசம்; ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
கூரைவீடு தீயில் எரிந்து நாசம்; ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
நாகையில் கூரை வீடு தீயில் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது.
கூரைவீடு தீயில் எரிந்து நாசம்
நாகை மஞ்சக்கொல்லையை சேர்ந்தவர் முருகானந்தம். பெயிண்டர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் உறவினர் வீட்டிற்கு வெளியூர் சென்றுவிட்டனர். நேற்று முருகானந்தம் தனது கூரை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் வீட்டின் மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பற்றி எரிந்தது.
ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர்.
ஆனாலும் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்துப்பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தது. இதன் சேதமதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.