2-வது நாளாக மணல் குவாரி செயல்பட வில்லை
கந்தனேரி பாலாற்றில் 2-வது நாளாக மணல் குவாரி செயல்பட வில்லை.
வேலூர்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பாலாற்றில் அரசு அனுமதியுடன் கடந்த 6 மாதங்களாக மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளுவதாகவும், நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென 6 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் மணல் குவாரியில் இயங்கி வரும் அலுவலகத்தில் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதிகாரிகள் சோதனையில் ஈடுபடும் தகவல் ஊழியர்களுக்கு தெரிந்தவுடன் நேற்று முன்தினம் முதல் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக மணல் குவாரி செயல்படவில்லை. மணல் ஏற்றி செல்வதற்காக வந்த நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story