கிராமங்களுக்குள் புகுந்த கடல்நீ்ர், குடியிருப்புகளை சூழ்ந்தது
சிர்காழி, கொள்ளிடத்தில் 10 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகளால் கடல்நீர் கிராமங்களுக்குள்புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது.
சீர்காழி:
சிர்காழி, கொள்ளிடத்தில் 10 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகளால் கடல்நீர் கிராமங்களுக்குள்புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது.
காற்றுடன் மழை
'மாண்டஸ்' புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார், மாதானம், கொண்டல், ஆதமங்கலம், மங்கைமடம், நல்லூர், மகேந்திரபள்ளி, காட்டூர், புளியந்துறை, பழைய பாளையம், தாண்டவன் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சீர்காழி நகர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ஈசானிய தெரு, ெரயில்வே ரோடு, சிதம்பரம் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.
10 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகள்
புயல் காரணமாக சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம் உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
பழையார், மடவாமேடு, ஓலக்கொட்டாயமேடு, கூழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், கீழமூவர்க்கரை, பூம்புகார், வானகிரி, சாவடி குப்பம், நாயக்கர் குப்பம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.கடல் அலைகள் 10 அடி உயரத்திற்கு மேல் எழுந்தது. கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கருங்கல் தடுப்புச்சுவரை எழுந்த ராட்சத அலைகளால் கிராமங்களுக்கு தண்ணீர் புகுந்தது.