ஆற்றில் வீசப்பட்ட வாலிபரின் உடலை தேடும் பணி தீவிரம்


ஆற்றில் வீசப்பட்ட வாலிபரின் உடலை தேடும் பணி தீவிரம்
x

ஆற்றில் வீசப்பட்ட வாலிபரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்தது.

திருச்சி

மலைக்கோட்டை:

அடித்துக்கொலை

திருச்சி இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகூரான் என்ற நாகூர் மீரான். சம்பவத்தன்று இவரை, பட்டர்வெர்த் ரோட்டை சேர்ந்த சண்டி என்ற சக்திவேல்(வயது 26), கீழ ஆண்டாள் தெருவை சேர்ந்த விருமாண்டி என்ற யுவேந்திரன்(19) மற்றும் 18 வயதுடைய 2 சிறுவர்கள் ஆகியோர், சிந்தாமணி பகுதியில் உள்ள ஓடத்துறைக்கு ஒரு பஞ்சாயத்து பேச வேண்டும் என்று கூறி கடத்தி சென்றதாக நாகூர் மீரானின் தங்கை தாஜ் நிஷா கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து நாகூர் மீரானை கடத்திச் சென்ற 4 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்.

இதில் முன்விரோதம் காரணமாக 4 பேரும் சேர்ந்து நாகூர் மீரானை தலையில் தாக்கி, ஓடத்துறை ரெயில்வே பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் தள்ளிவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அடித்துக்கொன்று ஆற்றில் வீசப்பட்ட நாகூர் மீரானின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தேடும் பணி தீவிரம்

இதைத்தொடர்ந்து நேற்று தீயணைப்புத்துறை மற்றும் நீச்சல் தெரிந்த நபர்கள் மூலம் காவிரி ஆற்றில் ஓடத்துறையில் இருந்து பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் நேற்று மாலை வரை தீவிரமாக தேடியும் நாகூர் மீரானில் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அவரது உடலை தேடும் பணி நடந்தது.

1 More update

Next Story