பிரம்மதேசம் அருகேதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைதுகடைக்கு சீல் வைப்பு


பிரம்மதேசம் அருகேதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைதுகடைக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 1 July 2023 6:45 PM GMT (Updated: 1 July 2023 6:45 PM GMT)

பிரம்மதேசம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்


பிரம்மதேசம்,

திண்டிவனம் பெருமுக்கல் கிராம கூட்டுச்சாலையில் உள்ள ஒரு கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, பிரம்மதேசம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் பெருமுக்கல் கிராம கூட்டுச்சாலையில் உள்ள அனைத்து கடைகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், சிவராமன் (வயது 43) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்தபோது அங்கு சாக்கு மூட்டையில் 580 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிவராமனை கைது செய்தனர். மேலும், அவரது வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, அந்தகடைக்கு மரக்காணம் மண்டல துணை தாசில்தார் ரபியுல்லா மற்றும் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மூடி சீல் வைத்தனர்.


Next Story