பரபரப்பை கிளப்பிய வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்... சேலம் கலெக்டர் விளக்கம்


பரபரப்பை கிளப்பிய வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்... சேலம் கலெக்டர் விளக்கம்
x

பள்ளிக் கட்டடம் தொடர்பாக ஆட்சியர் தனது வாட்ஸ் அப் எண்ணில் ஸ்டேட்டஸ் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்,

சேலம் மாவட்ட ஆட்சியராக கார்மேகம் உள்ளார். இவர், நாளிதழில் வெளியான செய்தி ஒன்றை ஸ்டேட்டஸாக வாட்ஸ்-அப்பில் வைத்திருந்தார். அந்த செய்தியில் தாரமங்கலம் பகுதியில் செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகள் 6 மாதமாகியும் இன்னும் திறக்கப்படவில்லை என்றும், அமைச்சருக்காக காத்திருப்பதால் மாணவர்கள் இடநெருக்கடியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சேலம் ஆட்சியரின் இந்த ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆட்சியர் கார்மேகம், தனக்கு ஸ்டேட்டஸ் வைக்கும் பழக்கமே இல்லை என்றும், கை தவறி இது நிகழ்ந்திருக்கலாம் என்றும், சம்பந்தப்பட்ட பள்ளியை முதல்வர் வருகையின்போதே திறந்துவிட்டோம் என்றும், கூறி உள்ளார்.



Next Story