நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கும் 'வெப் சீரிஸ்' படப்பிடிப்பு-ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் நடந்து வருகிறது
நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கும் 'வெப் சீரிஸ்' படப்பிடிப்பு-ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் நடந்து வருகிறது
ஊட்டி
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் பசுமை நிறைந்தும், இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. தென்னிந்திய அளவில் சினிமா படப்பிடிப்புக்கு ஏற்ற இடமாக உள்ளது. ஊட்டி, குன்னூர் பகுதிகளில் வெளிநாடுகளில் நிலவும் காலநிலையும், கோத்தகிரியில் சுவிட்சர்லாந்து நாட்டில் நிலவும் சீதோஷ்ண காலநிலையும் நிலவுகிறது. இங்கு பல்வேறு நடிகர்களின் படங்கள் சூட்டிங்மட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக ஊட்டி சுற்று வட்டார பகுதியில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கும் வெப் சீரிஸ் தொடர் நடந்து வருகிறது. நேற்று காலை ஊட்டி அடுத்த தேவர் சோலை பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்பை அந்த பகுதி மக்கள் ஆர்வமாக பார்த்தனர். மேலும் 3 நாட்களுக்கு முன்னர் நடிகர் யோகி பாபு ஊட்டியில் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இதுகுறித்து படப்பிடிப்பு நிர்வாகத்தினர் கூறுகையில், சட்னி, சாம்பார் என்ற தலைப்பில் நடிகர்கள் யோகி பாபு, சார்லி, நடிகைகள் வாணிபோஜன், சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்த வெப் சீரிஸ் தொடருக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடிந்து விடும். இந்தத் தொடரை இயக்குனர் ராதா மோகன் இயக்குகிறார் என்றனர்.