பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'


பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு சீல்
x
தினத்தந்தி 10 July 2023 8:15 PM GMT (Updated: 10 July 2023 8:15 PM GMT)

ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க நீலகிரி மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதன்படி நீலகிரியில் கோவில்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள், தட்டுகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இருப்பினும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்திடும் வகையில், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் இளங்கோகிலகுரு மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று ஊட்டி மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தனர். இதில் ஒரு கடையில் 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அந்த கடைக்கு சீல் வைக்க ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் கமர்சியல் சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த ஒரு கடைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story