வன்னியடி வாய்க்கால் ஷட்டரை சீரமைத்து தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்


வன்னியடி வாய்க்கால் ஷட்டரை சீரமைத்து தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்
x

வன்னியடி வாய்க்கால் ஷட்டரை சீரமைத்து தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்

தஞ்சாவூர்

வன்னியடி வாய்க்காலில் பழுதடைந்த ஷட்டரை சீரமைத்து அதன் இருப்புறங்களிலும் தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை மனு

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு வன்னியடி கிராம விவசாயிகள் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:- கபிஸ்தலம் அருகே இளங்கார்குடி கிராமம் கார்த்திகை தோட்டம், மணல்மேடு, நாணல்காடு உள்பட நூறுஏக்கர் விவசாய நிலப்பரப்பு பணிகளுக்கு வன்னியடி வாய்க்காலில் இருந்து தண்ணீர் செல்கிறது. இந்தநிலையில் கார்த்திகை தோட்டம், நாணல்காடு ஆகிய பகுதி வாய்க்கால்கள் குறுகலாக உள்ளது. எனவே அந்த வாய்க்கால்களை அகலப்படுத்தி தூர்வார வேண்டும்.

தடுப்பு சுவர் கட்ட வேண்டும்

விவசாய பணிகளை மேற்கொள்ள தண்ணீரை தேக்கி வைக்கும் வன்னியடி வாய்க்கால் ஷட்டர் பழுதடைந்துள்ளது. எனவே தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் பழுதடைந்த ஷட்டரை சீரமைத்து தர வேண்டும். இரவு நேரங்களில் வன்னியடி வாய்க்காலில் இருப்புறமும் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக வாய்க்காலின் இருப்புறமும் தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும். வன்னியடி அரசலாறு செல்லும் பாதை இடையே புதிய பாலம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story