ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்


ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்
x

பேரணாம்பட்டு அருகே ஒற்றை யானை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

வேலூர்

பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களிலும், மா, வாழை தோப்புகளிலும் காட்டு யானைகள் கூட்டம் மற்றும் அப்பகுதியில் சுற்றி திரிந்து வரும் ஒற்றை யானை ஆகியவை தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் சேராங்கல் காப்புக்காடு, மோர்தானா காப்புக்காடு இடையே சுற்றித்திரிந்து வரும் ஒற்றையானை நேற்று அதிகாலை 3 மணியளவில் குண்டலப்பல்லி வனப் பகுதியையொட்டியுள்ள பாலின்ராஜ் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் புகுந்து மாமரக்கிளைகளை முறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் வனத்துறைனர் பட்டாசு வெடித்து அருகிலுள்ள மோர்தானா காப்புக்காட்டிற்குள் விரட்டியடித்தனர்.


Next Story