புரோட்டா தர மறுத்த தொழிலாளியின் மண்டை உடைப்பு


புரோட்டா தர மறுத்த தொழிலாளியின் மண்டை உடைப்பு
x
தினத்தந்தி 13 July 2022 4:23 PM GMT (Updated: 13 July 2022 5:05 PM GMT)

கம்பத்தில் புரோட்டா தர மறுத்த தொழிலாளியின் மண்டை உடைத்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி

கம்பம் மேற்கு பகுதியில் உள்ள கம்பம் மெட்டு காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 19). கூலித்தொழிலாளி. இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கம்பம் உதயம் நகரை சேர்ந்த அக்பர் அலி என்பவர் வழி மறித்து புரோட்டாவை தரும்படி கேட்டார். ஈஸ்வரன் தர மறுத்தார். இதனால் அக்பர் அலி அவரை அவதூறான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அக்பர் அலியின் வீட்டுக்கு சென்று தாய் சாரபேகத்திடம் ஈஸ்வரன் கூறினார். அப்போது அங்கு வந்த அக்பர் அலி ஆத்திரமடைந்து, அப்பகுதியில் கிடந்த கல்லை எடுத்து ஈஸ்வரனின் மண்டையை உடைத்தார். பின்னர் அங்கு இருந்து தப்பியோடி விட்டார். இதில் காயமடைந்த ஈஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்பர் அலியை தேடி வருகின்றனர்.


Next Story