கோபி அருகே கட்டிலில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது


கோபி அருகே  கட்டிலில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது
x

கட்டிலில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது

ஈரோடு

கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையத்ைத சேர்ந்தவர் விக்னேஸ். விவசாயி. இவருடைய மனைவி மகாஸ்ரீ. நேற்று காலை வீட்டில் உள்ள கட்டிலில் மாகஸ்ரீ படுத்திருந்தார். அப்போது கட்டிலின் கீழ் பகுதியில் இருந்து திடீெரன ஒருவித சத்தம் வந்தது. உடனே அவர் கட்டின் கீழ் பகுதியில் பார்த்தார். அப்போது அதில் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கட்டிலில் பதுங்கி இருந்த பாம்பை மீட்டனர். மீட்டகப்பட்ட பாம்பு 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஆகும். உடனே பாம்பை வனத்துறையினர் கொண்டு சென்று வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

1 More update

Next Story