சாலையோரம் குவிந்து கிடக்கும் மணல்


சாலையோரம் குவிந்து கிடக்கும் மணல்
x

சாலையோரம் குவிந்து கிடக்கும் மணல்

திருப்பூர்

தளி,

உடுமலையில் இருந்து தாராபுரத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. உடுமலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பெரிய கோட்டை ஊராட்சி வரை போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அந்த சாலை அகலப்படுத்தப்பட்டு அதன் மையப் பகுதியில் கான்கிரீட் தடுப்புச் சுவர் வைக்கப்பட்டது. இதனால் விபத்துக்கள் குறைந்து பாதுகாப்பான பயணம் கிடைத்தது. தற்போது தடுப்பு சுவர் பகுதியில் மண்குவியல் உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுவதால் மண் காற்றோடு காற்றாக பறந்து சென்று பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை மண் பதம் பார்த்து வருவதால் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதையடுத்து சாலையின் தடுப்பு சுவரை யொட்டிய இரண்டு பகுதியிலும் தேங்கி உள்ள மண் அகற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் வாகன ஓட்டியில் மத்தியில் எழுந்து உள்ளது.

---------------


Next Story