சாலையில் சிதறிகிடக்கும் ஜல்லி கற்கள், மணல்


சாலையில் சிதறிகிடக்கும் ஜல்லி கற்கள், மணல்
x

சாலையில் சிதறிகிடக்கும் ஜல்லி கற்கள், மணல்

திருப்பூர்

தளி

சாலைகளில் செல்லும் டிப்பர் லாரிகளில் அதிக அளவு மண்ணை ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் செல்வதால் கற்கள் மற்றும் மண் சாலையில் சிதறுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

உடுமலை காந்தி சதுக்கத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் டிப்பர் லாரிகள் கற்களுடன் கூடிய மண் துகள்களை சிதற வைத்து ெசல்கிறது. சாலையில் சிதறிக்கிடக்கும் கற்களால் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் அசுரவேகத்தில் செல்லும் டிப்பர் லாரிகளை மீது நடவடிக்கை எடுப்பதுடன் மேம்பாலத்தில் சிதறி கிடக்கும் கற்கள் மண் துகள்களை உடனடியாக அகற்றி பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

---------------


Next Story