ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்


ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
x

ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி

லால்குடி:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் ரெமி ஜூலியன்(வயது 43). ராணுவ வீரரான இவர் என்ஜினீயரிங் ரெஜிமெண்டில் ஹவால்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவியும், ஜெனித் ஜோயல்(9) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் லே லடாக்கில் பணியில் இருந்தபோது, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெமி ஜூலியன் கடந்த 19-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் லே லடாக்கில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் இரவு நெய்குப்பையில் உள்ள அவரது வீட்டுக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று அவரது உடலுக்கு முன்னாள் மேஜர் ஜெனரல் என்.ஆர்.கே.பாபு, சுபேதார் மேஜர் ஆல்நேரி கேப்டன் மாணிக்கவாசகம், சுபேதார் மேஜர் சந்தோஷ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதையடுத்து துப்பாக்கி ஏந்திய 14 ராணுவ வீரர்களின் மரியாதையுடன், ரெமி ஜூலியன் உடல் ெநய்குப்பையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story