கள்ளக்காதலியுடன் தூங்கிய தந்தையின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன்
காரைக்குடி அருகே கள்ளக்காதலியுடன் தூங்கிய தந்தையின் தலையில்் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் காயத்துடன் கள்ளக்காதலி உயிர் தப்பினார்.
காரைக்குடி
காரைக்குடி அருகே கள்ளக்காதலியுடன் தூங்கிய தந்தையின் தலையில்் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் காயத்துடன் கள்ளக்காதலி உயிர் தப்பினார்.
புரோட்டா மாஸ்டர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டையை அடுத்த ஆவத்தாங்குடியைச் சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 47). இவருடைய மனைவியும், மகனும் மகளும் உசிறுவயல் கிராமத்தில் வசித்து வந்தனர்.
சில வருடங்களுக்கு முன் அடைக்கலம், திருப்பூரில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான சிவகாமி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் ஆனது. பின்னர் அந்த பெண்ணை மட்டும் அழைத்துக்கொண்டு ஆவத்தாங்குடி வந்து, அவருடன் அடைக்கலம் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் உசிறுவயலில் தாய், தங்கையோடு வசித்து வந்த அடைக்கலத்தின் மகன் முருகேசனுக்கு (22) தந்தை மீது ஆத்திரம் ஏற்பட்டது. கள்ளக்காதலியை விட்டுவிட்டு தங்களோடு வரும்படி அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
கல்லை போட்டு கொலை
இந்தநிலையில். முருகேசனும், அவரது நண்பரான 17 வயது சிறுவனும் நள்ளிரவில் ஆவத்தாங்குடி சென்றனர். அங்கே தந்தையின் வீட்டில் புகுந்தனர். தூங்கிக்கொண்டிருந்த தந்தை அடைக்கலம் மற்றும் சிவகாமி ஆகியோர் தலையில் கல்லை தூக்கிப்போட்டுள்ளனர்.
இதில் சிவகாமி படுகாயம் அடைந்து மயங்கினார். உயிருக்கு போராடிய அடைக்கலத்தை கல்லாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் நிலைகுலைந்த அடைக்கலம் ரத்தவெள்ளத்தில் பிணமானார். உடனே முருகேசனும், அவரது நண்பனும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து அலறிய சிவகாமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.
2 பேர் கைது
ரத்தவெள்ளத்தில் அடைக்கலம் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாக்கோட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிவகாமி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உ.சிறுவயலில் பதுங்கி இருந்த முருகேசனையும், அவரது 17 வயது நண்பனையும் ேபாலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.