சட்டப்பேரவை உறுப்பினர்களை கடிந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு..!


சட்டப்பேரவை உறுப்பினர்களை கடிந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு..!
x

சட்டப்பேரவை உறுப்பினர்களை நோக்கி சபாநாயகர் அப்பாவு கடிந்து பேசினார்.

சென்னை,


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கேள்வி நேரத்துடன் பேரவை நிகழ்வுகள் தொடங்கின. அப்போது, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசியின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர் தமிழரசியை கேள்வி கேட்க சபாநாயகர் அழைத்தார். அப்போது அவையில் உறுப்பினர்கள் பேச்சு சத்தம் அதிகமாக கேட்டது.

இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், "உறுப்பினர்கள் பேரவையில் அமைதியாக இருங்கள். கேள்வி என்ன, பதில் என்ன என்று கொஞ்சம் கவனியுங்கள். இது கேளிக்கை விடுதி இல்லை; சட்டமன்றம். யார் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க கூடிய இடம்" என்று கடிந்து பேசினார்.

1 More update

Next Story