சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு


சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 7 May 2023 6:45 PM GMT (Updated: 7 May 2023 6:46 PM GMT)

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே உள்ள மேலப்பட்டியில் சொக்கன்கருப்பர், மலையாண்டி சுவாமி கோவிலில் சித்திரை அன்னதான விழா நடைபெற்றது. இதையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கோவிலின் சார்பில் ஜவுளி எடுத்துவரப்பட்டு வாடி வாசலில் கட்டியிருந்த கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. மாடுபிடி வீரர்கள், சீறிப்பாய்ந்த காளைகளை விரட்டி பிடித்தனர். ஒரு சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் பிடிபடாமல் தன் எல்லையை தாண்டி சென்றது. போட்டியின்போது காளைகள் முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story