மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்


மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 22 May 2023 6:45 PM GMT (Updated: 22 May 2023 6:45 PM GMT)

சிங்கம்புணரி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரியூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மலை மருதீஸ்வரர் முனிநாதர் கோவில் உள்ளது இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி வெகு சிறப்பாக திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏரியூர் பகுதியில் விவசாயம் செழிக்க வேண்டியும் பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் ஏரியூர் ஏரிக்கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக ஏரிக்கண்மாயில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. சிவகங்கை மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

இதனை தொடர்ந்து கிராமத்தின் சார்பில் ஜவுளி எடுத்துவரப்பட்டு கோவில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்து வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாகவும் வயல் வெளிப்பகுதிகளில் ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. பல மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்க முயன்றனர் ஒரு சில காளைகள் மட்டுமே பிடிப்பட்டன. பல காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 28 பேர் காயமடைந்தனர் ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபீசா பானு தலைமையில் ஏரியூர் வட்டார மருத்துவர் பிரேம்குமார் மற்றும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் செவிலியர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஏரியூர் கிராம மக்கள் செய்திருந்தனர்


Next Story