ஸ்டீயரிங் ராடு கட் ஆகி எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதிய அரசு பஸ்...கடலூரில் பரபரப்பு
கடலூர் அருகே தனியார் பஸ்ஸும் அரசு பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் சிதம்பரத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல் 10 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.அரசு பேருந்து ஓட்டுநருக்கு காலில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் முதற்கட்டமாக அரசு பேருந்தின் ஸ்டியரிங் ராடு கட்டானதாகவும் அதனால் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதிக் கொண்டதாகவும் தெரியவருகிறது விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.