வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்


வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்
x

அன்னவாசல் அருகே வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி கூடலூரில் வைக்கோல் போரில் திடீரென தீ பிடித்தது. பின்னர் மளமளவென பரவி தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்ேபரில் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story