வால்பாறை எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் சரிவர ஒளிரவில்லை- நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்


வால்பாறை எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் சரிவர ஒளிரவில்லை- நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
x

வால்பாறை எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் சரிவர ஒளிரவில்லை என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனா்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் சரிவர ஒளிரவில்லை என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனா்.

நகராட்சி கூட்டம்

வால்பாறையில் நகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். துணைத் தலைவர் செந்தில்குமார்: வால்பாறை நகராட்சி பகுதியில் உள்ள எந்த ஒரு வார்டு பகுதியிலும் குறிப்பிடும்படியான வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை. தாவரவியல் பூங்கா திறக்கப்படாமல் இருந்து வருகிறது. அதில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவு அமைப்புக்கள் ஒரே நபர் பல மையங்களுக்கு பொறுப்பு வகித்து வருகிறார்.அனைத்து துறை அதிகாரிகள் கவுன்சிலர்கள் இணைந்து வால்பாறை பகுதியில் இருக்கும் அரசு நிலங்கள் குறித்து நில அளவை செய்ய நடவடிக்கை எடுத்து பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். கவுன்சிலர்கள் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் சரிவர ஒளிரவில்லை என்று தெரிவித்தனர்.

பிரச்சினைக்கு முக்கியத்துவம்

நகராட்சி ஆணையாளர் பாலு கூறியதாவது:- கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மன்றக்கூட்டம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வார்டு பகுதியிலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் விரைவில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.எஸ்டேட் பகுதி சாலைகள் சீரமைப்பு செய்ய எஸ்டேட் நிர்வாகத்திடமிருந்து தடையில்லா சான்று பெற்றத் தரவேண்டும். மழை கால பாதிப்பு பணிகள் உடனடியாக செய்து தரப்படும். சத்துணவு குறைபாடுகளை சரி செய்ய கவுன்சிலர்கள் சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் விரைவில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story