பா.ஜனதாவினர் பிச்சை அளிக்கும் போராட்டம்
நெல்லை, வள்ளியூரில் பா.ஜனதாவினர் பிச்சை அளிக்கும் போராட்டம் நடத்தினர்.
நெல்லை, வள்ளியூரில் பா.ஜனதாவினர் பிச்சை அளிக்கும் போராட்டம் நடத்தினர்.
பிச்சை அளிக்கும் போராட்டம்
நெல்லையில் நேற்று பா.ஜனதா கட்சியினர் பிச்சை அளிக்கும் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக ஒதுக்குகின்ற நிதியை மாநில அரசு முறையாக செயல்படுத்தாமல் அதை மற்ற திட்டங்களுக்கு ஒதுக்குவதாகவும், மேலும் அந்த நிதியை முறையாக பட்டியலின மக்களுக்கு செலவு செய்யாமல் திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதை கண்டித்தும், பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை முறையாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தினர். இதையொட்டி பட்டியலின மக்களின் நிதியை மற்ற திட்டத்திற்கு ஒதுக்கும் தமிழக அரசுக்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து அனுப்பி வைக்கும் வகையில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முத்துபலவேசம் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
வள்ளியூர்
இதேபோல் வள்ளியூரில் நெல்லை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியலின அணி சார்பில் பிச்சை அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. பட்டியலின மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் பாபுதாஸ், ஒன்றிய தலைவர்கள் ராஜேஷ், அருள் ஜெகரூபர்ட் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.