மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
x

மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் 48 பேர் நூறுநாள் வேலைத்திட்ட அட்டை வைத்துள்ளனர். இவர்களில் 30 பேருக்கு மட்டுமே நூறுநாள் வேலை வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 18 பேருக்கு வேலை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்தும், மீதமுள்ள 18 பேருக்கும் 100 நாள் வேலை வழங்கக்கோரியும் மாப்படுகை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் நல உரிமைகள் பாதுகாப்போர் நலச் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் உள்பட பலர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, வருகிற வியாழக்கிழமையில் இருந்து அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




Next Story